பிரதான செய்திகள்

கல்குடாவின் வசந்தம் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் தான் – செயலாளர் முஸ்தகீம் தெரிவிப்பு

(அபூ செய்னப்)

கல்குடாவின் வசந்தம் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் தான் பிரதி அமைச்சர் அமீர் அலியினாலேயே எமது பிரதேசம் அபிவிருத்தி கண்டு வருகிறது என-புனான,ஜெயந்தியாய அபிவிருத்தி குழு செயலாளர் முஸ்தகீம் தெரிவித்தார்.

அண்மையில் புனான ஜெயந்தியாய பிரதேசத்தில் பிரதியமைச்சர் அமீர் அலியின் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு கட்டிடத்திறப்பு விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். பிரதி அமைச்சரை வரவேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த பிரதேசத்திற்கு தேர்தல் காலங்களில் பலர் வந்து போகின்றார்கள்,வெற்றி பெற்றதன் பின்னர் இந்த பிரதேசத்தை மறந்து விடுகின்ற அரசியல் வாதிகளுக்கு இடையில் பிரதி அமைச்சர் அமீர் அலி வாக்களித்த எம்மை மறந்து போய்விடாமல் வெற்றி பெற்ற உடனேயே எம்மை வந்து சந்தித்து தமது நன்றிகளையும் தெரிவித்தார்.அது மட்டுமல்லாமல் இந்த குறிப்பிட்ட காலத்தில் எமது பிரதேசத்தில் சில அபிவிருத்தி பணிகள் பிரதி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.22ec4e61-60d3-4de0-b4ba-35122ef743d1

மட்டு மாவட்டத்திலேயே பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் சேவை தான் இன,மத,பேதங்கள் தாண்டி எல்லாப்பிரதேசங்களுக்கும் கிடைக்கின்றது. அவர் கல்குடாவின் வசந்தம் என்றும் தெரிவித்தார்.a1d488eb-0cda-4785-af96-6ff679351416

Related posts

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைக்கு புதிய தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமனம்!

Editor

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தியில் பாரிய நிதி மோசடி

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor