செய்திகள்பிரதான செய்திகள்

கல்கமுவ ஆற்றில் நீராட சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கல்கமுவ, பலுகடவல ஆற்றில் இன்று (13) மதியம் நீராட சென்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

12 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுமிகள் ஆற்றில் நீராடச் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் இரத்தினபுரி மற்றும் மீரிகமவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது கல்கமுவ ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

Related posts

கிழக்கு மாகாண ஆளுநரின் கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு?

wpengine

விளையாட்டு உளவியல் பாதிப்பு ஏற்படுத்தும்

wpengine

குடும்பத் தகவல் திரட்டுப் படிவம் பொலிஸ் கோரிக்கை

wpengine