கற்பிட்டி நகரில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு எதிராக அறிவித்தல்

கற்பிட்டி நகரில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு எதிராக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 வருடங்களுக்கு மேல் உரிய வகையில் வாடகையை செலுத்தாத 10 கடைகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபை செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல தடவைகள் அறிவிப்புகள் விடுத்தும் இதுவரை அவர்கள் பணத்தை செலுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பத்து கடைகளின் உரிமையாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவை பணத்தை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி பிரதேசசபையின் அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து நிலுவை பணம் செலுத்தாத கடைகளுக்கு இன்று காலை அறிவித்தல் விடுத்ததாகவும் கற்பிட்டி பிரதேச சபை செயலாளர் கே.பி.சந்தன குமார குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares