கருத்தடை மற்றும் குடும்ப கட்டுபாடு பொருட்கள் விளம்பரத்திற்கு தடை

கருத்தடை சாதனங்கள், குடும்பக் கட்டுபாட்டு பொருட்கள் ஆகியவற்றை விளம்பரம் செய்யும் அனைத்து ஒளி மற்றும் ஒலிபரப்புக்களை பாகிஸ்தான் அதிகாரிகள் தடைசெய்துள்ளனர்.

இத்தகைய வணிகப் பொருட்களின் விளம்பரங்கள் மாசில்லா குழந்தைகளின் மனதில் ஆர்வத்தை தூண்டுகின்றன என்று பொது மக்கள் புகார் தெரிவிப்பதால், அவற்றின் ஒளி மற்றும் ஒலிபரப்புகளை உடினடியாக நிறுத்த வேண்டும் என்று தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒழுங்காற்று அமைப்பு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு, குறிப்பிட்ட கருத்தடை பற்றிய விளம்பரமானது, ஒழுக்கக்கேடு என்று கூறி தடைசெய்யப்பட்டது.

ஆனால், சமூக அளவில் பிற்போக்கான நாட்டில் கருத்தடை சாதனங்களின் வணிகம் என்பது அரிதானது.

பாகிஸ்தான் உலகிலேயே ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். அதில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு வசதிகள் கிடைப்பதில்லை என்று ஐ.நா. மன்றம் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares