பிரதான செய்திகள்

கருணா பிள்ளையான் சதிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  ஆகியோர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்புகள் இருவேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை பேணுவதற்கான  இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் வலியுறுத்தியிருந்தார். பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை,  போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது திரு.விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.

மாகாண சபை மற்றும் 13 ஆவது திருத்தத்தினை  முழுமையாக அமுல்படுத்துதல் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழி அர்த்தப்புஷ்டியான பரவலாக்கம் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதனை பிரதி உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக்கூறினார் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு …

Maash

கற்பிட்டி பிரதேச மீனவர்களுக்காக கடற்தொழில் பிரதி அமைச்சரை சந்தித்த ஆஷிக்

wpengine

ஆளுநர் சார்ள்ஸின் தலைமையில் நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல்!

Editor