கருணாவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்! 5% பிரயோசனமும் இருக்கவில்லை

கருணா அம்மான் அரசாங்கத்திடம் சரணடைந்து இருந்த போதிலும் போரில் அவரால் இராணுவத்திற்கு ஐந்து சத வீத பிரயோசனமும் இருக்கவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


கருணா அம்மான், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் புதுக்குடியிருப்பு உட்பட வடக்கில் பல பகுதிகளில் இருந்த போதிலும் பிரபாகரனின் வீட்டை கூட அவர் இராணுவத்திற்கு காண்பிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


“ கருணா சரணடைந்து இருந்தாலும் போரில் ஈடுபடும் போது அவரால் எமக்கு ஐந்த சத வீத பிரயோசனமும் கிடைக்கவில்லை. அவர் பிரபாகரனுடன் புதுக்குடியிருப்பு உட்பட வடக்கில் பல இடங்களில் இருந்துள்ளார். குறைந்தது அவர் பிரபாகரனின் வீடு பற்றிய தகவல்களை கூட எமக்கு வழங்கவில்லை. நாங்களே பின்னர் அவற்றை கண்டுபிடித்தோம்.


இராணுவத்திற்கு பலத்தை கொடுக்கும் இயலுமை அவருக்கு இருக்கவில்லை. அவர் 150 பேருடன் சரணடைந்தார். அந்த 150 பேரில் 80 பேர் 13 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுவர்கள். அவர்களிடம் பலம் இருக்கவில்லை.

இப்படி இருந்த கருணா தற்போது ஒவ்வொரு கதைகளை கூற முயற்சித்து வருகிறார். அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்” எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares