கட்டுரைகள்பிரதான செய்திகள்

கருச்­சி­தைவு சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட வேண்­டுமா? இல்­லையா?

கருச்­சி­தைவு பற்றி பல நாடு­களில் சார்­பா­கவும் எதி­ரா­கவும் கருத்­துகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் எதி­ரான கருத்­து­களே வேரூன்­றி­யுள்­ளன. ஆயினும் தற்­கால உலகில் நடை­பெறும் சம்­ப­வங்­களால் இலங்­கையில் கருச்­சி­தைவு சட்­ட­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­க­ப்­பட வேண்டும் என்ற கருத்து மெல்லத் துளிர்ந்து வரு­கி­றது. ஆகவே நாம் இரண்டு கருத்­து­க­ளையும் அறிந்து கொள்­வது காலத்தின் தேவை­யாகும்.

வாச­கர்­க­ளிடம் மன்­னிப்பு

கருச்­சி­தைவு பற்றி அறிய வேண்­டி­ய­வர்கள் படித்­த­வர்­களை விட பாமர மக்­க­ளே­யாவர். ஆகவே இக்­கட்­டுரை அவர்­களும் சரி­யாக விளங்கிக் கொள்­வ­தற்­காக நாட்டு வழக்கில் பாவிக்­கப்­படும் சில சொற்கள் இக்­கட்­டு­ரை­யிலும் பாவிக்­கப்­பட்­டுள்­ளன. அச் சொற்கள் பாவிக்­கா­விட்டால் பாமர மக்கள் கருச்­சி­தை­வுக்கு அடிப்­ப­டை­யான கார­ணத்தை சரி­யாக புரிய மாட்­டார்கள். ஆகவே அச்சொல் பாவிக்­கப்­ப­டு­வ­தற்கு மன்­னிப்பு கோரு­கிறேன். எல்­லோ­ரையும் விட அறிவு குறைந்த மக்­களே தமது குடும்ப மானத்தைக் காப்­பாற்ற வேண்டும் என்ற எண்­ணத்தில் தவ­றான முறையில் கருச்­சி­தைவு செய்ய முயன்று உயிரை இழக்­கின்­றனர். இக்­கா­ர­ணத்­தி­னால்தான் அவர்­களின் மனதில் இங்கு கூறப்­படும் கார­ணங்கள் பதி­யப்­பட வேண்­டு­மென்று இக்­கட்­டு­ரையை எழு­தி­யுள்ளேன்.

கருச்­சி­தைவு ஏன் செய்ய வேண்டும்?

கருச்­சி­தைவு ஏன் செய்ய வேண்டும் என்­ப­தற்கு வைத்­தி­யர்கள் ஒரு கார­ணத்தைக் கூறுவர். கருத்­த­ரித்­துள்ள பெண்ணின் உடல் நிலை கருவைத் தாங்­கவும் பெற்­றெ­டுக்­கவும் இடம் கொடுக்கும் நிலையில் இல்லை என்­பதால் அவர்கள் கருச்­சி­தை­வுக்கு ஆலோ­சனை கூறு­கின்­றனர். உதா­ர­ண­மாக இந்­தி­யாவில் 13 வயதில் கருத்­த­ரித்த ஒரு பெண் குழந்தை கருச்­சி­தைவு செய்ய அனு­ம­திக்­கப்­பட்­டதை நாம் அறிவோம். ஆகவே வைத்­தி­யர்கள் கூறும் காரணம் நியா­யப்­ப­டுத்த கூடி­ய­தாகும்.

விகா­ர­மான குழந்தை அல்­லது

பூர­ண­மா­காத குழந்தை

(Abnormal Fortus)

இன்­னு­மொரு காரணம் விகா­ர­மான அல்­லது அவ­யங்­களில் குறை­பா­டு­டைய குழந்­தை­யாக உரு­வெ­டுக்கும் சிசுக்­களை பிறப்­ப­தற்கு முன்­னரே அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்­கா­லத்தில் பிறக்கப் போகும் குழந்தை என்ன குழந்தை? ஆணா? பெண்ணா? எனப் பார்ப்­ப­தற்கும் அக் குழந்­தையும் உடல் அம்­சங்­களின் வளர்ச்­சியைப் பார்ப்­ப­தற்கும் வச­திகள் உண்டு. ‘ஸ்கான்’ என அழைக்­கப்­படும் முறையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட இயந்­திரம் மூலம் இதனைக் கண்டு பிடிக்­கலாம். அப்­ப­டி­யான ஒரு நிலையில் அதா­வது விகா­ர­மாக அல்­லது அங்கக் குறை­பா­டு­க­ளுடன் ஒரு குழந்தை பிறந்து வாழ்­வதை விட அக்­கு­ழந்தை பிறப்­ப­தற்கு முன்­னரே கர்ப்பப் பையில் இருக்­கும்­போதே அழித்து விடு­வது அக் குழந்­தைக்கும் பெற்­றோ­ருக்கும் நல­மா­ன­தாக இருப்­பதால் அத்த­கைய சிசுவை பிறப்­ப­தற்கு முன்­னரே கருச்­சி­தைவு செய்து அழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்­றோ­ருக்கு உண்­டாகி விடு­கின்­றது. இதுவும் நியா­யப்­ப­டுத்­தக்­கூடிய கார­ண­மாகும்.

பாலியல் வல்­லு­றவால் பிறக்கும் குழந்­தைகள்

இன்­னு­மொரு காரணம் பாலியல் வல்­லு­றவால் ஒரு பெண்­ணுக்கு கருத்­த­ரித்தால் அக்­கு­ழந்­தையின் நிலை எப்­படி இருக்கும். சமூ­கத்தில் ஒடுக்­கப்­பட்ட குடும்பத் தாயா­கவும் குழந்­தை­யா­க­வுமே அவர்கள் இருப்பர். தற்­கா­லத்தில் பாலியல் வல்­லு­றவு பரந்த அளவில் நடை­பெ­று­கி­றது. தரா­தரம் பார்க்­காமல் காரி­யா­ல­யங்­களில்,  பாட­சா­லை­களில் மற்றும் வேலைத்­த­லங்­களில், அயல் வீடு­களில், சமய குர­வர்­களின் மத்­தியில் மற்றும் எல்லா இடங்­க­ளிலும் பாலியல் வல்­லு­றவு நடை­பெ­று­கி­றது.

மிகச் சமீ­பத்தில் நான் வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் வாசித்த செய்தி ஒன்­றின்­படி ‘சந்­தியா’ என்ற பாட­சாலை மாணவி தனது உயர்­தர பரீட்­சையை முடித்­து­விட்டு சந்­தோ­ச­மாக வீட்­டுக்கு வந்து TV பார்த்துக் கொண்­டி­ருக்­கும்­போது ஒரு பாதகன் அவ­ளது வீட்­டிற்குள் சென்று பாலியல் வல்­லு­றவு புரிந்­தது மட்­டு­மல்ல, அவளைக் கொலையும் செய்தான். இவள் பரீட்­சையின் பின்னர், தான் எந்த தொழி­லுக்குப் போக வேண்டும் எப்­படி வாழ வேண்டும் என்­றெல்லாம் கனவு கண்­டு­கொண்­டி­ருந்­தி­ருப்பாள். பாதகன் அதை­யெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் அழித்­து­விட்டான். இவள் உயி­ருடன் இருந்­தி­ருந்தால் அவ­ளுக்கு கருச்­சி­தைவு செய்ய சட்டம் இடம் அளிக்­குமா? இல்லை. அவள் சமூ­கத்தில் ஒதுக்­கப்­பட்­ட­வ­ளாக அல்­லது தினமும் கேவ­ல­மான பேச்­சுக்­களைக் கேட்ட வண்­ணமே இருக்க வேண்டும். ஆகவே பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­பட்ட பெண் குழந்­தை­களின் சிசுவை அழிக்க முயற்­சிப்­ப­தையும் நாம் நியா­யப்­ப­டுத்­தலாம்.

கர்ப்­பிணி தாயின் உயி­ருக்கு ஆபத்து Mother Facing Threat to her Life from Pregnancy

இன்­னு­மொரு காரணம் ஒரு கர்ப்­பிணித் தாய் தனது குழந்­தையை ஏறக் குறைய 10 மாதம் சுமக்­கும்­போது பல துன்­பங்­க­ளுக்கு ஆளாவாள். சில வேளை­களில் அவள் இறந்தும் போவாள். அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அவள் விருப்­பத்­துடன் கருச்­சி­தைவு செய்வாள் என்று கூற முடி­யாது. ஆயினும் அவள் கருச்­சி­தைவு செய்­யா­விட்டால் அவ­ளது குழந்தை பிறக்கும். அவள் இறந்து விடுவாள். தாயில்லா குழந்­தை­யாக அக் குழந்தை வளரும். தாய் இல்லா குழந்தை தறு­த­லை­யாகும் என்று சிலர்­கூ­று­வ­துண்டு. ஆனால் தாயில்லாக் குழந்­தை­யாக வளரும் குழந்­தைகள் எல்லாம் கெட்­ட­வர்­க­ளாக வளர்­வ­தில்லை. மிக அறி­வா­ள­னா­கவும் உலகம் போற்­று­ப­வ­னா­கவும் வரலாம். இதற்கு ஒரு உதா­ரண மனி­த­னாக லிய­னாடோ டாவின்சி விளங்­கு­வதை நாம் காணலாம்.

ஒரு பாட­சா­லையில் ஆசி­ரியர் கற்­பித்துக் கொண்டு இருக்கும் போது ஒருநாள் ஆசி­ரியர் சிறு­வ­குப்­பா­ரிடம் ஒவ்­வொ­ரு­வரும் உங்­க­ளது தாயாரின் படத்தை வரைந்து எனக்குக் காட்­டுங்கள் என்று கூறி­ய­போது ஒரு­வரைத் தவிர மற்ற எல்­லோரும் வரைந்து காட்­டினர். ஆசி­ரியர்  வரை­யாத மாண­வ­னிடம் நீர் ஏன் வரை­ய­வில்லை என்று கேட்­ட­போது எனக்கு அம்மா இல்லை. நான் அம்­மாவைக் கண்­ட­தில்லை என்று கூறினான். ஆசி­ரியர் அம்­மாண­வனைத் தேற்­று­வ­தற்­காக மாண­வனின் வீட்­டுக்குச் சென்­ற­போது அம் மாண­வனின் அறையில் பல பெரிய படங்கள் கீறப்­பட்டு இருந்­தன. அனைத்தும் பெண் தாயார்­களின் படங்கள். ஆசி­ரியர் மாண­வ­னிடம் இவர்கள் யார் என்று கேட்க இவர்­களில் ஒருவர் எனது அம்­மா­வாக இருக்க மாட்­டார்­களா? என கற்­பனை பண்ணி நான் வரைந்­துள்ள படங்­களே என்று கூறினான். இவன் வேறு யாரும் இல்லை. உலகப் பிர­சித்­தி­பெற்ற டிய­னாடோ டாவின்சி ஆவார். ஆகவே தாயில்லாக் குழந்­தைகள் தறு­த­லை­யாகும் என்­பதை ஏற்க முடி­யாது. எனவே வைத்­தி­யர்­களின் ஆலோ­ச­னைப்­படி உயி­ருக்கு ஆபத்து என்று கரு­தினால் தாயா­ருக்கு கருச்­சி­தைவு செய்ய இட­ம­ளிப்­பது நியா­ய­மா­னது.

கருச்­சி­தைவை நியா­யப்படுத்­தலாம் என்­பது பற்றி

மேலே கூறிய கார­ணங்­க­ளினால் அதா­வது பாலியல் வல்­லு­றவு விகா­ர­மாக உரு­வாகும் சிசுவை தாயின் உயி­ருக்கு ஆபத்து என்ற சந்­தர்ப்­பங்­களில் கருச்­சி­தைவு செய்ய அனு­ம­திப்­பதில் தவறு இல்லை என்று கூற வேண்டும். ஆயின் கருச்­சி­தைவை கீழைத்­தேய நாடுகள் ஆத­ரிப்­ப­தில்லை. அவர்­க­ளது ஆன்­மீக கலா­சார வாழ்க்­கையே அதற்குக் கார­ண­மாகும். மேலே கூறிய கார­ணங்­களை வெகு­வாக எதிர்ப்­ப­வர்கள் மிகக்­கு­றைவு. ஆயினும் சட்­டத்தில் கருச்­சி­தை­வுக்கு இட­மில்லை.

கருச்­சி­தை­வுக்கு இடம் தரப்­பட வேண்டும்  என்­ப­வர்­களின் கருத்தைப் பார்ப்போம் மேலே கூறிய கார­ணங்கள் கருச்­சி­தை­வுக்கு ஆத­ர­வாக சமூ­கத்தால் அங்­கீ­க­ரிக்கக் கூடி­ய­வை­யாக இருந்­த­போதும் சமூகம் வெளிப்­ப­டை­யாக அங்­கீ­க­ரிக்க தயா­ரில்லை என்­பதை மனதில் கொள்ள வேண்டும்.

கருச்­சி­தைவை சட்­ட­பூர்­வ­மாக அங்­கீ­கரிக்க வேண்டும் என்­ப­வர்கள்  கூறும் கார­ணங்கள் கர்ப்­பப்பை ஒரு பெண்ணின் உடலில் உள்­ளது. ஒரு பெண் தனது உடலில் உள்ள உறுப்­புகளில் ஒன்றை மாற்ற வேண்­டு­மென்று விரும்­பினால் அதனை தடுக்கச் சட்­டத்தில் இட­மில்லை. பாலையே மாற்­று­வதை நாம் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். முகங்­க­ளையே அழ­கு­ப­டுத்தி வேறு­ப­டுத்­து­வ­தையும் நாம் காணலாம். ஆகவே தனக்கு சொந்­த­மான கருப்­பையை Womb இல் உள்­ளதை அழிக்க தனக்கு உரி­மை­யில்லை என்­பது விக­ட­மா­னது. ஏனெனில் Womb தனக்கு சொந்­த­மா­னது என்று அவள் கூறு­வ­தாகும். இதனை ஏற்க முடி­யாது. ஏனெனில் Womb அவ­ளுக்கு சொந்­த­மாக இருக்­கலாம். ஆனால் அந்த Womb இல் உண்­டாகும் உயிர் சிசு அவ­ளுக்குச் சொந்­த­மா­ன­தல்ல. இதன் பொருள் என்­ன­வெனில் ஒரு குறித்த அளவு காலம் மட்­டுமே தான் பெற்­றெ­டுத்த குழந்­தைக்கு பெற்றோர் உரித்­தா­ள­ராக விளங்­கு­கின்­றனர். அவர்கள் பெரி­ய­வர்­க­ளாக மாறி தம்மைத் தாமே பரி­பா­லித்துக் கொள்­ளக்­கூ­டிய நிலைக்கு வந்த பின்னர் பெற்­றோ­ரி­ட­மி­ருந்து விடு­ப­டு­கின்­றனர். அவர்கள் விரும்­பி­ய­படி வாழலாம். ஆகவே ஒரு பெண்ணின் Womb இல் உண்­டாகும் குழந்தை பரி­பூ­ர­ண­மாக அவ­ளுக்குச் சொந்­த­மா­ன­தல்ல. சமூ­கத்­திற்கே சொந்­த­மா­னது. சமூ­கத்­திற்குச் சொந்­த­மான ஒன்றை ஒருவர் அழிக்க முடி­யாது. அதற்கு தண்­ட­னை­யுண்டு. இதனால் கருச்­சி­தைவு அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்ற தர்க்­கத்தை சமூகம் ஏற்­ப­தில்லை.

மேலும் கருச்­சி­தைவை அங்­கீ­க­ரித்தால் உயிர்க்­கொலை ஒன்றை செய்­வதை சட்டம் அங்­கீ­க­ரிக்­கி­றது என்றே கொள்ள வேண்டும். எனவே கருச்­சி­தைவு செய்­ய­வேண்டும் என்ற கோரிக்­கைக்கு ஆத­ர­வில்லை.

கருச்­சி­தைவை ஏன் செய்­கி­றார்கள்

நாம் வாழும் சமூகம் சில அருஞ் செல்­வங்­க­ளான பண்­பு­க­ளையும் கலா­சா­ரத்­தையும் நமக்கு அளித்­துள்­ளது. அதில் ஒன்று குடும்பம் என்­பது ஆகும். குடும்பம் என்­பது ஆண் ஒரு­வனும் பெண் ஒருத்­தியும் இணைந்து வாழும் வாழ்­வாகும். இது குடும்­பத்­தாலும் மற்றும் சமூ­கத்­த­வர்­க­ளாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அவர்கள் இரு­வரும் தாம்­பத்­திய வாழ்க்­கையில் ஈடு­பட்டு குழந்­தை­களை பெறும்­போது சமூகம் அதனை அங்­கீ­க­ரிக்­கி­றது. வளை­காப்பு சடங்கு தொடக்கம் பெயர் வைத்தல், பிறப்பு நாள் கொண்­டாட்டம் என்­ப­ன­வற்றை கொண்­டா­டு­கின்­றனர். இப்­ப­டி­யான சந்­தோ­ச­மான ஒரு நிகழ்­வுதான் குழந்தை உற்­பத்­தியும் பிறப்­பு­மாகும். ஆகவே இந்த குழந்­தையை கருச்­சி­தைவு செய்ய பெற்­றோரோ, தாய் தகப்­பனோ விரும்­பு­வார்­களா? ஒரு போதும் விரும்­ப­மாட்­டார்கள். அப்­ப­டி­யாயின் கருச்­சி­தைவை விரும்­புப­வர்கள் அல்­லது அனு­மதி கேட்­ப­வர்கள் யார்? எனப் பார்ப்போம்.

குடும்ப பண்­பு­க­ளுக்கு புறம்­பாக தரிக்கும் குழந்­தை­க­ளையே அழிக்க உரிமை கோரு­கின்­றனர். சில சம­யங்­களில் விவா­க­மா­காத இருவர் ஒரு­வ­ருடன் ஒருவர் ஆரம்­பத்தில் பழகி பின்னர் நெருங்கிப் பழகி அதன் பின்னர் மறை­வான முறையில் தாம்­பத்­திய உறவில் ஈடு­பட்டு விடு­கின்­றனர். இதன் பல­னாக இறை­வனே அவர்­களை உல­கிற்கு காட்டிக் கொடுக்க குழந்­தையை தரிக்க செய்து விடு­கிறான்.

இள வயதில் கண­வனை இழந்த பெண் பாலியல் இன்­பத்தை வேறு வழி­களில் பெறு­வ­துண்டு. இதனை கள்ளத் தொடர்பு என அழைப்பர். அப்­போதும் சில குழந்­தைகள் உண்­டா­கி­வி­டு­கின்­றன.

இன்னும் சில சந்­தர்ப்­பங்­களில் கணவன் வேறு நாடு சென்று வாழும்­போது இடைப்­பட்ட காலத்தில் இன்­னு­மொ­ரு­வ­ருடன் நட்புக் கொண்டு குழந்தை தரித்து விடு­கின்­றனர். இதே­போல பல சந்­தர்ப்­பங்­களில் கணவன் – மனைவி என்ற சமூக அங்­கீ­கார உற­வுக்கு அப்பால் பல பெண்கள் கருவை வாங்கிக் கொள்­கின்­றனர்.

இவர்­களால் சமூ­கத்­திற்கு முகம் கொடுக்க முடி­யாது. குழந்­தையை தரிக்க செய்­த­வரும் ஏதோ சாக்கு போக்குக் கூறி சமா­ளித்து விடுவார். ஆகவே பெண்­ணா­னவள் தனது வயிற்றில் உள்ள சிசுவை அழிக்­கவே விரும்­புவாள். சில சந்­தர்ப்­பங்­களில் தானே உயிரை மாய்த்துக் கொள்வாள்.

மேலே கூறிய வகு­திக்குள் வரு­வோரே கருச்­சி­தைவை கோரு­கின்­றனர். இதனை சமூகம் அங்­கீ­க­ரிக்­குமா? என்­பதே பிரச்­சினை. இந்­தி­யா­விலோ இலங்­கை­யிலோ இதற்கு அங்­கீ­காரம் கிடைக்­காது. தகப்­ப­னில்லா குழந்தை என்ற பெயரை தாய் எடுத்துக் கொடுக்க மாட்டாள். ஆகவே தான் கருச்­சி­தைவை செய்ய அவள் முயற்­சிக்­கிறாள். இது ஒரு சமூகப் பிரச்­சினை. மற்றும் உடல் பிரச்­சி­னை­யாகும். உடல் பிரச்­சி­னை­க­ளான மது அருந்­துதல், புகை­பி­டித்தல், பிழை­யான பழக்க வழக்­கங்­களில் ஈடு­படல், ஆண் புணர்ச்சி என்­பன போன்­ற­வற்றை போல் இதுவும் ஒன்­றாகும். இதற்கு சட்ட அந்­தஸ்து கோர முடி­யாது.

இலங்­கையில் மேலே கூறிய கள்ள வழி­களில் விவாக அந்­தஸ்து இல்­லாமல் உற்­பத்­தி­யாகும் சிசுக்கள் 1000 அளவில் ஒரு நாளில் அழிக்­கப்­ப­டு­வ­தாக புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

களனி பல்­க­லைக்­க­ழக சமூ­க­வியல் பேரா­சி­ரியர் ஒரு­வரின் அறிக்­கையில் 658 பேர் அளவில் கருச்­சி­தைவு செய்­கின்­றனர் என தெரி­வித்­துள்ளார். இதன் படி பார்த்தால் ஒரு வரு­டத்தில் 240170 பெண்கள் கருச்­சி­தைவு செய்து கொள்­கின்­றனர். சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருச்­சி­தைவு இருக்­கும்­போது இத்­த­கைய தொகை கருச்­சி­தைவு செய்தால் கருச்­சி­தைவை சட்­ட­பூர்­வ­மாக்­கினால் என்ன நடக்கும் என நினைத்துக் கூட பார்க்க முடி­யாது. எனவே சிதைவை சட்­ட­பூர்­வ­மாக்கக் கூடாது. சமீ­பத்தில் இந்­தி­யாவில் இருந்து எத்­த­னையோ ஆயிரம் கருச்­சி­தைவு மாத்­தி­ரைகள் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்ட செய்­திகள் பத்­தி­ரி­கையில் வெளி­வந்­ததை நாம் காணலாம். ஆகவே கருச்­சி­தைவு தடுக்­கப்­பட முடி­யாத ஒன்று. ஆயினும் சட்­ட­பூர்­வ­மாக்க முடி­யாத ஒன்­று­மாகும்.

தொகுப்­புரை

கருச்­சி­தைவு கோரிக்­கைக்கு காரணம் கள்­ள­மாக அல்­லது கணவன் மனைவி தொடர்பு இல்­லா­த­வர்­க­ளி­டையே உண்­டாகும் சிசுவை அழிப்­ப­தற்­கா­கவே இருக்­கின்­றது. இது சமூகப் பிரச்­சி­னை­யாகும். இதனை இல­குவில் தீர்க்க முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன அவர்கள் தனது தோட்­டத்­திற்குச் சென்­ற­போது அங்­குள்ள ஒரு நாய் அவரைக் கடிக்க வந்­த­போது தோட்ட வேலைக்­காரன் அருகில் இருந்து கல்லை எடுத்து அந்த நாய்க்கு எறிந்தான். நாய் ஓல­மிட்டு கொண்டு கதறி ஓடி­யது. உடனே ஒன்றும் கூறாத ஜே.ஆர். பின்னர் வேலைக்­கா­ரனை கூப்­பிட்டு நீ ஏன் நாய்க்கு கல்லால் அடித்தாய் என்று கேட்­ட­போது நான் கல்லால் அடிக்­கா­விட்டால் அது ஹாமுவை கடித்­தி­ருக்கும் என்று கூறினார். உடனே இனி அப்­படி நாய்க்கு அடிக்க வேண்டாம் என்று கூறினார். ஜே.ஆர். அவர்கள் மரண தண்­டனை இலங்­கையில் வரக்­கூ­டாது என்­ப­தற்கு இந்த நாய் இட்ட ஓலமும் ஒரு  காரணம் என்று ஒரு கட்­டுரை வந்­தி­ருந்­தது. நாய் இப்­பா­டு­பட்டால் மனிதன் கயிற்றில் தொங்­கும்­போது என்ன பாடு­ப­டுவான் என்று அவர் எண்­ணி­யி­ருக்க வேண்டும் என்று கூறலாம்.

அத்­த­கைய இலங்­கையில் சிசு­வொன்றை Womb மில் அழிக்க இடம் கொடுக்­கப்­ப­டுமா? என்­பது நினைத்துக் கூட பார்க்க முடி­யாத ஒரு விட­ய­மாகும். ஆகவே இங்கு செய்­யக்­கூடி­யது என்­ன­வெனில் அறி­வு­ரை­களை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாகும்.

1. முறை­யான பாலியல் அறிவை மாண­வர்­களின் பாட விதா­னத்தில் சேர்க்க வேண்டும்.

2. சமூக ஆர்­வ­லர்கள் பாலியல் அறிவை கிராம மட்­டத்தில் புகட்ட வேண்டும். குழந்தை தரிக்­காத செயற்கை முறை­களைப் புகட்ட வேண்டும்.

3. சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருச்­சிதைவு செய்­வதால் ஏற்­படும் உயிர் இழப்­பு­க­ளைப்­பற்றி மக்­க­ளுக்குப் புகட்ட வேண்டும். கருச்­சி­தைவால் உண்­டாகும் இரத்தப் பெருக்கு கார­ண­மாக 12% மேற்­பட்டோர் இறக்­கின்­றனர். 50% மேற்­பட்ட பெண்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கின்­றனர் என்­பதை விளங்­கப்­ப­டுத்த வேண்டும். ஆண் – பெண் உறவின் இன்­பத்தை மறக்க முடி­யாது. அதேபோல் கருச்­சி­தை­வையும் அங்­கீக­ரிக்க முடி­யாது.

Related posts

மட்டக்களப்பு- மயிலந்தனை கிராம மக்கள் குடி நீர் இன்றி மக்கள் அவதி கவனம் செலுத்தாத அரசியல்வாதிகள்

wpengine

“வென யோவன் புர வீடமைப்புக் கிரமாம்”அமைச்சா் சஜித் ஆரம்பித்து வைத்தார்

wpengine

தயாசிறி ஜயசேகர முற்றிலும் பொய் சொல்லுகின்றார்! மூன்று ஆண்டுகளாக எனக்கு அழைப்பில்லை

wpengine