கம்பளை நகர சபைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்! குப்பைகளை அகற்று

கம்பளை நகரில் ஒரு மாத காலம் குப்பைகளை அகற்றப்படாமையை கண்டித்து இன்று(18) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னேடுக்கப்பட்டது.

கம்பளை நகரில் உள்ள அணைத்து குப்பைகளை  அம்புலாவ எனும் பிரதேசத்தில்  4 வருடங்களாக  கொட்டப்பட்டு வந்தன. அம்புலாவ பிரதேசத்தில்  வாழும் மக்கள் கம்பளை நகரில் உள்ள குப்பைகளை  கொண்டு  வந்து  இங்கே கொட்ட வோண்டாமென கம்பளை நகர சபை உரிய அதிகாரிகளிடம்  குறினர்.

குப்பைகள் கொண்டு செல்லும் பாதையை  அம்புலாவ பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களினால் முடி வைக்கப்பட்டிருந்தது. இதனால் கம்பளை  நகரில் உள்ள   குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் வீதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டன.

இதனால், கம்பளை நகரில் உள்ள மத தலைவர்கள் வியாபாரிகள்  பொது மக்கள்  ஒன்றினைந்து உடனடியாக குப்பைகளை அகற்ற  வோண்டுமென ஆர்ப்பாட்டம் முன்னேடுத்தனர்.

மேலும் கம்பளை மெய்ன் சந்தியில் இருந்து நாவலபிட்டி வழியாக நகரசபையை வந்தடைந்து, கம்பளை நகர சபை செயலாளரிடம் கம்பளை அனைத்து  இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை  முன் வைத்தனர்.

கம்பளை நகர சபை செயலாளர் கருத்து தெரிவிக்கையில்: இன்று அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றப்படும் என தெரிவித்தார்,

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares