கத்தாரில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.

அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தம், கத்தாரில் இன்று (29) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.


மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் – அமெரிக்க படைகள் இடையே, கடந்த 20 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.


இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியது.

உடன்பாடு எட்டிய நிலையில், அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில், இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில், இந்தியா சார்பில், கத்தாரிலுள்ள இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கலந்து கொள்வார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தன்னுடைய படைகள் அனைத்தையும் விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளது.

 159 total views,  3 views today

Comments

comments

Shares