செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

கண்பார்வை குறைபாடு மனவிரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை.

யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார்.

கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

வவுனியா அபிவிருத்தி கூட்டத்தில் முன்னால் அமைச்சர்

wpengine

சிறிதரன்,சுமந்திரன் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டார்கள்.

wpengine

வவுனியாவில் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

Editor