கண்ணாடி போத்தல்களுக்கு தடை! களி மண் பயன்படுத்த வேண்டும்

இலங்கையில் அலுவலகங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் குடிநீர் சேமித்து வைக்கும் கண்ணாடி போத்தல்களை நீக்கிவிட்டு அதற்காக களி மண் குவளைகளை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கும், புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய ஆணையத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


கண்ணாடி போத்தல்களை பயன்படுத்துவதனால் பல்வேறு சுகாகதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆணையத்தின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


புதிய சுவையுடன் நீரை குடிக்க கூடிய வகையில் களி மண்ணால் போத்தல்களை உருவாக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நீர் சேமித்து வைத்ததற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி போத்தல்களில் பெரும்பான்மையானவை மதுபான போத்தல்களாகும் என தெரியவந்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares