பிரதான செய்திகள்

கண்டுபிடிக்கப்பட்ட வாள்கள் பள்ளிவாசல்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல

பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதலில் வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், 10 கொள்கலன்களில் இலங்கைக்கு வாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை.

ஒரு நகரசபை உறுப்பினரிடம் இருந்த வாள் பள்ளிவாசலின் மத குருவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தவிர வேறு எந்த பள்ளிவாசல்களிலும் வாள்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கண்டுபிடிக்கப்பட்ட வாள்கள் பள்ளிவாசல்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. சில பள்ளிவாசல்களுக்கு பொலிஸாரும், படையினரும் பல முறை சென்று சோதனையிட்டுள்ளனர்.

சோதனையிடும் போது பாதுகாப்பு தரப்பினர் ஒரு வரையறை பேண வேண்டும். அத்துடன் இது குறித்து ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாம்புரி கடற்கரை பகுதியில் கை , கால் இல்லாத நிலையில் சடலம்

wpengine

அரசியல்வாதிகளுக்குள் பிரச்சினை! வடமாகணத்திலிருந்து பணம் திரும்புகின்றது- ஆளுநர்

wpengine

சுயநல அரசியல் காரணங்களுக்காதூவப்பட்ட இனவாதம்! இன்று ஒற்றுமையாகிவிட்டது.

wpengine