பிரதான செய்திகள்

கண்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்த குடிநீர் திட்டம்

கண்டி மாவட்டம் கடுகண்ணாவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குடிநீர் வழங்கல் திட்டங்களை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், கடுகண்ணாவ, பாம்வத்தை குடிநீர் வழங்கல் திட்டம், 62ஆம் கட்டை – ரயின்கோ நிறுவனம் வரையிலான குடிநீர் வழங்கல் திட்டம், ரணவிரு மாவத்தை குடிநீர் வழங்கல் திட்டம் போன்றவற்றினை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் பலரும் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

நுவரெலியாவில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 60வீத வெற்றி

wpengine

பெரும்தொகை. கேரளகஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது!!

Maash

“சமூக ஒற்றுமைக்கு உறுதிபூணுவோம்” மீலாத் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்

wpengine