பிரதான செய்திகள்

கணவனின் சந்தேகம் இளம் பெண் தற்கொலை முயற்சி

யாழ்ப்பாணத்தில் இளம் மனைவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவிலுள்ள கணவன் சந்தேகப்பட்டதால் குறித்த இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இளம் மனைவி நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறான தவறான முடிவுக்கு முயன்றுள்ளார்.
கனடாவை சேர்ந்த இளைஞனுக்கும் குறித்த பெண்ணுக்கும் கடந்த மாதம் இந்தியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் பின்னர் கணவன் கனடா சென்றுள்ள நிலையில், பெண் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளனார். எனினும் இருவருக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதீத கோபம் காரணமாக கணவன் வீடியோ அழைப்பில் காத்திருக்க, மனைவி தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

Related posts

தேங்காய் சார்ந்த பொருற்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி.!

Maash

வவுனியாவில் மர்மமான முறையில் கொலையான காவல் துறை அதிகாரி

wpengine

மன்னார் நகரை அசுத்தபடுத்தும் பருவகால பறவைகள் பாதுகாப்பது யார்?

wpengine