பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வாடகை வாகனங்களின் சாரதிகள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய நபர்களுக்கு இதற்கு முன்னர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

இவ்வாரம் அவசரமாக கூடுகிறது மு.கா

wpengine

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

wpengine

வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இர்பான் வைத்தியசாலையில்

wpengine