உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

கட்டிடம் கட்ட கிரிக்கெட் போட்டி நடாத்தும் தென்னிந்திய நடிகர்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பிறமொழி நடிகர்களும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள். ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டு உடல் நிலையை கருதி முதல் பந்தை வீசி போட்டியை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் கமல்ஹாசன் ஒரு அணி சார்பில் விளையாடுவார் என்று தெரிகிறது.

நட்சத்திர கிரிக்கெட்டில் 8 அணிகள் மோதுகின்றன. ஒரு அணியில் 6 நடிகர்கள் இருப்பார்கள். இதன்மூலம் எல்லா அணிகளுக்கும் சேர்த்து 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும்.

முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதியில் மோதும். அதில் ஜெயிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும். காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விளையாட்டுகள் நடைபெறும்.

சூர்யா, விஷால், ஆர்யா, தனுஷ், ஜீவா, விஷ்ணு உள்ளிட்ட 8 பேர் அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கதாநாயகி தூதுவராக இருப்பார். நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட கதாநாயகிகள் தூதுவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

ஒவ்வொரு அணிக்கும் சென்னை, மதுரை, திருச்சி என்று ஊர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. நடிகர்கள் தற்போது படப்பிடிப்பு ஓய்வில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நட்சத்திர கிரிக்கெட்டில் அனைத்து நடிகர்-நடிகைகள் மற்றும் வெளி மாநில நடிகர்கள் பங்கேற்க இருப்பதாலும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரள்வார்கள் என்பதாலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் தேர்தல் கமிஷனரிடமும் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஸ்டேடியத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

Related posts

கரையோர பிரதேசங்களில் மழையை விட காற்றின் வேகம் அதிகம்

wpengine

ஊடகவியலாளர்கள் சம்மந்தமாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முறைப்பாடு! சுத்தம் செய்யும் ஜனாதிபதி

wpengine

காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு அடுக்கு மாடி வீடு

wpengine