பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கட்சி காரியாலயத்தை வவுனியாவில் திறந்து வைத்த விக்னேஸ்வரன்

ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயம் வவுனியா வெளிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் விக்னேஸ்வரன் தலைமையில் குறித்த காரியாலய திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் திலீப் ஆகியோர் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக அலுவலகத்தை திறந்து வைத்துள்ளனர்.

மேலும், குறித்த நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், கட்சியின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கிய IOC நிறுவனம்..!

Maash

தீயாய் பரவுகிறது பெசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குறிய குரல் பதிவு!

Editor

இலங்கையில் IT துறையில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Editor