பிரதான செய்திகள்

கட்சியொன்றினை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், கிராமத்தின் அபிவிருத்தியை செயற்படுத்த முடியவில்லை

வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தில், கிராமத்தின் முன்னேற்றத்திற்காக செயற்படுபவர்களுக்கு அரசியல் கட்சியொன்றினை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், கிராமத்தின் அபிவிருத்தியை செயற்படுத்த முடியவில்லை எனவும் அக்கிராம மக்கள் இன்று தெரிவித்தனர்.


வவுனியா அரசாங்க அதிபரிடம் தமது கிராமத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மகஜரொன்றினை கையளிப்பதற்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த புதிய கற்பகபுரம் கிராமத்தவர்களே இவ்வாறு தெரிவித்தனர்.

அரசாங்க அதிபரை சந்திப்பதற்கு முன்பாக ஊடகவியலாளர்களை சந்தித்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
புதிய கற்பகபுரம் கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கம் கடந்த 3 வருடங்களாக செயற்படாமல் உள்ளது.

அதனை புதுப்பிக்குமாறு மக்கள் கூறுகின்றபோது அதற்கு எவரும் செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

மக்களாக முன்னின்று கிராமத்திற்கான வாழ்வாதார உதவிகள் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் போது அங்கிருக்கும் சிலர் அச்சுறுத்தல் விடுவதுடன் உதவிகளையும் அமைப்புகள் உருவாக்கத்திற்கும் தடையேற்படுத்துகின்றனர்.

எமது கிராமத்திற்கு வீதிகள் புனரமைப்பு செய்யப்படவில்லை, வீதியால் மக்கள் பயணிக்க முடியாதுள்ளது.

அபிவிருத்தி தொடர்பாக கூட்டங்கள் நடத்துவதில்லை, கிராம தலைவரின் செயற்பாடு கவலையளிப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம். கனீபாவை சந்தித்து தமது கிராமத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் அக் கிராமத்தில் பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட காணி வேறொருவருக்கு விற்கப்பட்டமை தொடர்பாகவும் தமது பிரச்சனைகளை தெரியப்படுத்தியிருந்தனர்.

மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த அரசாங்க அதிபர் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய கற்பகபுரம் கிராமத்தவர்களின் விடங்களை கேட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்ததுடன்.

கிராம மக்களை பிரதேச செயலாளரிடம் சென்று குறித்த விடயங்களை தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து பிரதேச செயலாளாரிடம் சென்ற கிராமத்தவர்கள் பிரதேச செயலாளரிடமும் தமது கிராமத்தின் பிரச்சனைகளை எடுத்தியம்பியிருந்ததுடன் தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டத்தினை கூட்டி நிர்வாகத் தெரிவை செய்யுமாறும் கோரியிருந்தனர்.

Related posts

20வது அரசியலமைப்புத் திருத்தம்! நீதி மன்ற தீர்ப்பு சபாநாயகரிடம்

wpengine

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகவுள்ள அசத்தலான புதிய அப்டேட்ஸ்!

wpengine

இலங்கை தமிழர் போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wpengine