கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில்  குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.  

இதன்படி, இன்று  கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட  கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கமைய,  நாளைய தினம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலும் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய காரியாலயங்களிலும் ஏற்பட்ட இந்த கணனி கட்டமைப்பில் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட இந்த இந்த கணனி கட்டமைப்பு கோளாறு காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக அதிகளவானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது . 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares