கடன் அட்டைக்கான வட்டிவீதம் அதிகரிப்பு! மத்திய வங்கி கட்டுப்படுத்தவில்லை

கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தனியார் வங்கிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கடன் அட்டை வட்டி நூற்றுக்கு 15 வீதம் வரை குறைப்பதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், இலங்கை மத்திய வங்கியினால் இதுவரையில் அவசியமான ஆலோசனைகள் வங்கிகளுக்கு வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


அதற்கமைய வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கிளால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி நூற்று 28 வீதத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடன் வட்டி நூற்று 4 வீதம் குறைந்துள்ள நிலையில் கடன் அட்டையின் வட்டியும் அதனுடன் ஒப்பிட்டு குறைக்க வேண்டும். எனினும் இதுவரையில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் இரண்டு மாதங்களாக கடன் தவணையை அறவிடாமல் இருப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை சில நிறுவனங்கள் மாத்திரமே அமுல்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares