பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் புதிய வீட்டிற்கு பழியான சிங்களவர்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில் (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப் பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார்.


எனினும் அவர் மதுபோதையில் இருந்தமையால் தடுமாறி வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.


இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இன்றிரவு இடம்பெற்றது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

அமெரிக்க-தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சியினால் அணு ஆயுதப்போர் இடம்பெறும் சாத்தியம்.வட கொரியா எச்சரிக்கை!

Editor

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு விளக்கமறியல்

wpengine

வவுனியா விபுலானந்தா பாடசாலை வளாகத்தில் தற்கொலை அங்கி

wpengine