செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

கசிப்பு வியாபாரிகளின் வீடுகளுக்கு முன்னால் எச்சரிக்கை, மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மதுபான விற்பனையினை கட்டுப்படுத்த கோரி மாணிக்கபுரம், இளங்கோபுரம், வள்ளவர் புரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் மாணிக்கபுரம் கிராம அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

குறித்த போராட்டம் இன்று(6) 10 மணியளவில் முன்னெடுத்துள்ளார்கள்.

மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம்,உழைத்து வாழப்பழகு, ஊரை அழித்து வாழாதே, போதைப்பொருளை ஒழிப்போம் விசமிகளை அழிப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை கையில் தாங்கியவாறு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கிராமத்தில் இனம்காணப்பட்ட சட்டவிரோத கசிப்பு வியாபாரிகளின் வீடுகளுக்க முன்னால் சென்று அவர்களுக்காக எச்சரிக்கையாக இன்றுடன் கசிப்பு விற்பனையினை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வீட்டு படலைகளில் பதாதைகளையும் ஒட்டியுள்ளார்கள்.

மக்களின் இந்த கோரிக்கைகள் கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளருக்கும்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் எழுத்து மூல அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

பா.உ யோகஸ்வரனின் இனத்துவேச,கொந்தளிப்பும் –முஸ்லிகளின் சந்தேகங்களும்.

wpengine

வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்கச் சொல்வதற்கு விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் கிடையாது.

wpengine

நட்டஈடு, உரம் வழங்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் இராஜனமா- ரொஷான் ரணசிங்க

wpengine