பிரதான செய்திகள்

ஓமந்தை வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

இன்று அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவியந்திரம் மற்றும் பழுதடைந்துநின்ற கெப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
 

விபத்தில் கெப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
 

விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts

மன்னார்-அடம்பனில் கட்சி காரியாலயத்தை திறந்த றிஷாட் (படம்)

wpengine

கட்சி கூட்டத்தில் “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்“

wpengine

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு நிதி ஓதுக்கிடு -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine