பிரதான செய்திகள்

ஓட்டமாவடி புதிய பிரதேச செயலகம்! காணியினை பெற்றுக்கொடுத்த அமைச்சர் றிஷாட்; நன்றி தெரிவித்த அமீர் அலி

(அனா)
ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளின் கிராம சேகவர் பிரிவை இரட்டிப்பாக்கித் தருமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு காகித நகர் கிராமத்தில் இடம் பெற்றபோது அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையிலே எந்த பிரதேச செயலகமும் இல்லாதவாறு முதன் முறையாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக ஓட்டமாவடி பிரதேச செயலகம் அமையவுள்ளமை தொடர்பாக இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.

இப்பிரதேச செயலக கட்டடம் அமைப்பதற்கு மூன்று ஏக்கர் நிலப்பரப்பை விட்டுத் தந்த கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீனுக்கு இந்த இடத்தில் நன்றி கூறுகின்றேன் இதற்கு துணையாக அரசாங்க அதிபர் செயற்பட்டிருந்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கீழ் எட்டு கிராம சேகவர் பிரிவு மாத்திரமே காணப்படுகின்றது எனவே இதை அரசாங்க அதிபர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இதனை விஸ்தரித்து பதினாறு கிராம சேகவர் பிரிவாக மாற்றித் தருமாறு வேண்டுகின்றேன்.

அத்தோடு ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் பிரிவுகளையும் இரண்டு மடங்களாக விஸ்தரித்து தருமாறு இந்த இடத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆயிரத்து ஐநூறு குடும்பங்களுக்கு ஒரு கிராம சேகவர் இருக்கின்ற நிலவரத்திலே ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த நிலைமை இருந்து கொண்டு வருகின்றது.

எதிர்வரும் காலங்களின் அவசர அசவரமாக கிட்டத்தட்ட நானூறு குடும்பங்களுக்கு ஒரு கிராம சேகவர் பிரிவு என்கின்ற விடயத்தில் அரசாங்க அதிபர் கவனத்தில் எடுத்து அமைச்சருடன் கலந்து கொண்ட விடயத்தில் ஆற்றுப்படுத்தி உடனடியாக செய்து தருமாறு இவ்விடத்தில் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Related posts

என்ன விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்தாலும், அரிசி 100 ரூபாய்க்கு மேல் எமது ஆட்சிக் காலத்தில் விற்பனை செய்ய மாட்டோம்

wpengine

எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம்-றிஷாட்

wpengine

தாஜுதீன் கொலை! ஆனந்த சமரசேகரவை கைதுசெய்ய உத்தரவு

wpengine