பிரதான செய்திகள்

ஒழுங்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு! உள்ளூராட்சித் தேர்தல் நடக்கும்: ரணில்

Di

Reportஅறிவிப்பே இல்லாத உள்ளூராட்சி சபைத் தேர்தல், எதிர்காலத்தில் ஒழுங்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு அதிகாரிகளைத் தூண்டியதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக எதிரணிகள் தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்?

எதிர்க்கட்சியின் மிரட்டலுக்கு அவர் அடிபணியமாட்டார். மிரட்டலுக்கு அஞ்சிப் பதவியை விட்டு ஓடும் அரசியல்வாதி அவர் அல்லர்.

அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால் அது தோற்கடிக்கப்பட்டே தீரும். அறிவிப்பே இல்லாத உள்ளூராட்சி சபைத் தேர்தல், எதிர்காலத்தில் ஒழுங்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு நடைபெறும்.

இந்நிலையில் உள்ளூராட்சி அமைச்சுப் பதவியைத் தன்னகத்தே கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தனவைச் சீண்டிப் பார்ப்பதால் தேர்தல் நடைபெறும் என்று எதிரணியினர் கனவு காணக்கூடாது.

நாம் பெரும்பான்மைப் பலம் கொண்ட அரசாகும். அரசாங்கத்துக்கு எதிரான எதிரணியினரின் எந்தப் பிரேரணையும் வெற்றியடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி தேர்தல்! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

wpengine

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவின் பொது அறிவித்தல்

wpengine

றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சியில் குருனாகலில் அபிவிருத்தி வேலைத்திட்டம்

wpengine