பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒரு லச்சம் வேலைவாய்ப்பில் வட மாகாண மக்களுக்கு முன்னுரிமை

வடக்கில் வழங்கப்படும் ஒரு இலட்சம் வேலைஒவாய்ப்பு நியமனங்களில் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு செயலணியினால் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களை வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

எம்.ஏ.சுமந்திரன் கருத்து தொடர்பில் ஆளுநரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச வேலை வாய்ப்பு

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வேலைவாய்ப்புகளில் வடக்கு மாகாணங்களை சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் அரச உயர் மட்டங்களில் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஆகவே வடக்கு மாகாணங்களில் இடம்பெறும் அரச வேலைவாய்ப்புகளில் வெளி மாகாணங்களைச் சார்ந்தவர்களை அனுமதிக்க முடியாது,  மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு வைத்தியசாலையினால் பாதிக்கப்படும் மக்கள்! பலர் விசனம்

wpengine

ஆறுகளை அண்மித்த காடுகள் அழிக்கபட்டால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

wpengine

திருக்கோவில் தமிழ் பாடசாலை முஸ்லிம் ஆசிரியருக்கு தொழுகைக்கு செல்ல மறுப்பு-உலமா கட்சி கண்டனம்

wpengine