ஒரு நாள் ஊதியத்தை அனர்த்த நிவாரணமாக வழங்கிய ஊழியர்கள்

வீட்டமைப்பு மற்றும் நிர்மாணத்துறையின் அமைச்சரான சஜித் பிரேமதாசவின் தலைமையில் குறித்த அமைச்சின் ஊழியர்கள் தமது ஒரு நாள் ஊதியத்தை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வானது இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன் போது, 45 லட்சம் ரூபா பெறுமதியான நிவாரணங்கள் 7 கொள்கலன்களில் அடைக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன ,பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி , அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares