ஒரு இரவில் மூன்றாயிரம் பேரை கொலை செய்ய முடியுமா?. நடக்கக்கூடிய விடயமா? கருணா

என்னை யாரும் கைது செய்ய முடியாது என கூறியது உண்மைதான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் பிழை செய்ய வில்லை. அப்படியிருக்கையில் ஏன் என்னை கைது செய்ய வேண்டும். அதனால் தான் நான் அப்படி கூறினேன்.

நான் தவறிழைத்திருந்தால் என்னை கைது செய்ய முடியும். அந்த இரண்டு நிமிட காணொளியில், நான் கொலை செய்ததாக கூற வில்லை. நாங்கள் என்றுதான் கூறியுள்ளேன். நாங்கள் என்று கூறப்பட்ட விடயம் என்னவென்றால் யுத்தம். யுத்தத்தில் நடப்பதைதான் நான் சுட்டிக்காட்டினேன்.

அடுத்தது ஒரு நபர் ஒரு இரவில் மூன்றாயிரம் பேரை கொலை செய்ய முடியுமா?. நடக்கக்கூடிய விடயமா? நாம் அதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதைதான் இவர்கள் பூதாகரமாக்கி உள்ளனர். என்றார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares