பிரதான செய்திகள்

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம்

(அமைச்சின் ஊடகப்பிரிவு)

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார்.

செட்டிகுளப் பிரதெச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற போது உதவிப் பிரதேச செயலாளர் முகுந்தனுக்கு அமைச்சர் றிஷாட் இந்தப்பணிப்புரையை விடுத்ததுடன், அமைச்சர்களும் எம்பிக்ககளும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் தவறாது பங்பற்றும் போது அதிகாரிகள் அசிரத்தைக் காட்டுவது கண்டனத்துக்குரியதென அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தவறாது அழைப்புக்களை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

Related posts

தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தவிசாளர் நியமனம்

wpengine

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ள முன்னால் அமைச்சர்

wpengine

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு 19 வரை விளக்கமறியலில்.

Maash