பிரதான செய்திகள்

ஒய்வூதிய கொடுப்பனவு வங்கியில் வைப்பு

மே மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் தபால்கார்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகிப்பது அல்லது வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதனை தவிர தேவையான ஒருவர் வங்கிக்கு சென்று தனது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்துக்கொடுக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இம் மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.


இதன் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் இன்று காலை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலங்களுக்கு சென்றிருந்தனர்.


எனினும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வங்கிக்கோ, அஞ்சல் அலுவலகங்களுக்கோ வந்திருக்கவில்லை என ஓய்வூதியம் பெறுவோர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ அரசமைத்தால் மாத்திரமே முஸ்லிம்கள் இருப்பு உறுதி செய்யப்படும் – அஹமட் புர்கான்

wpengine

அமைச்சர் றிஷாட்க்கு எதிராக மீண்டும் பிரேரனை கொண்டும் வரும் சிங்கள அரசியல்வாதி

wpengine

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பற்றாக்குறையால் கற்பித்தல் நடவடிக்கைகளில் சிக்கல்!

Editor