ஐ.பி.எல் விளையாடி வந்த கெய்லுக்கு திடீர் ஓய்வு கொடுத்த மகன்!

ஐ.பி.எல் கிரிக்கெட்டில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவு அணி வீரர் கிறிஸ் கெய்ல்  ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு அணி இரண்டு ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (ஹைதராபாத்), ஒன்றில் தோல்வியும் (டெல்லி) கண்டுள்ளது.

இந்நிலையில், இந்த அணியில் இடம்பெற்றிருந்த கெய்லின் மனைவி நடாஷா பெரிட்ஜிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கெய்ல் அவசரமாக தாயகம் திரும்பி உள்ளார். கெய்ல்-நடாஷா தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் புனே அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு போட்டிகளிலும் கெய்ல் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெய்ல் இல்லாத நிலையில் அணித்தலைவர் கோலி, டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோரைத்தான் அந்த அணி மலைபோல் நம்பி உள்ளது. கெய்லுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares