ஐ.பி.எல் போட்டிகளில் லசித் மாலிங்க கலந்து கொள்வதில் சந்தேகம்

இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர் லசித் மாலிங்க பங்கு கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக மாலிங்க கலந்து கொள்கிறார். எனினும் அந்த அணியிலுள்ள அவர் தவிர்த்து ஏனைய 26 வீரர்கள் நேற்று மும்பையிலுள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, மாலிங்க தான் கலந்து கொள்வது குறித்து இதுவரை தனது அணியின் முகாமையாளருக்கு அறிவிக்கவில்லை என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்தத் தொடரின் இடைப் பகுதியிலேனும் அவர் அணியில் இணைந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியில் மாலிங்க இடம்பெறாவிடில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வேறு ஒருவர் அறிவிக்கப்படாமையே என கூறப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் காயம் காரணமாக லசித் மலிங்க கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares