உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஐரோப்பாவில் பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு – 8 மாணவர்கள் பலி!

ஐரோப்பாவில் பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு – 8 மாணவர்கள் பலி!ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு சேர்பியா. இந்நாட்டின் தலைநகர் பல்கிரெடி மாகாணம் விரகார் மாவட்டத்தில் பாடசாலை ஒன்று உள்ளது. இந்த பாடசாலையில் இன்று வழக்கம் போல மாணவ – மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பாடசாலையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினான். ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் 6 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய கேகே என்ற மாணவனை கைது செய்தனர்.

Related posts

3 சட்டமூலங்களின் உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்தர் சபாநாயகர்!

Editor

றிஷாட்டின் கைதுக்கு எதிராக மு.கா. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

அதிபர்களுக்கு மேலும் பல பொறுப்புகளை வழங்கிய கல்வி அமைச்சு

wpengine