பிரதான செய்திகள்

ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மோசடிகள் முறைப்பாடு

தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்து வரும் ஐந்து அமைச்சர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பினால் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

இந்த அமைச்சர்களுக்கு எதிராக இதற்கு முன்னரும் சில முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள், ஊழல் மோசடிகள், தரகுப் பணம் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக வசந்த சமரசிங்க வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Related posts

விஷேட தேவையுடையோர் விளையாட்டு! வவுனியா அல் இக்பால் முதலிடம்

wpengine

வெள்ள அகதிகளுக்காக களத்தில் நின்று உதவும் றிசாத் அமைச்சர்

wpengine

நாளை ஆசியாவின் இஸ்லாமிய மாநாடு பிரதமர் ஜனாதிபதி தலைமையில்

wpengine