அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அறுவர் கட்சியிலிருந்து நீக்கம்.

தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அறுவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஹேரத் முதியன்சலாகே சுசில் ஹேரத், அதிகாரநாயக்க முதியன்சேலாகே பெனலபொடே கெதர அனில் இந்திரஜித் தசநாயக்க, கரந்தகொல்ல வளவ்வே தனஞ்ச சம்பத் கரந்தகொல்ல, அளுத் கெதர பிரிய ரஞ்சன குமார ரத்நாயக்க, ஹேரத் முதியன்சலாகே குசுமா குமாரி மற்றும் கிரிஷாந்தி தில்ருக்ஷி பிரேமரத்ன ஆகியோரே கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.

தம்புள்ளை பிரதேச சபையின் முதல்வர் மற்றும் உப தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ குழு மற்றும் கட்சி செயற்குழுவின் தீர்மானத்திற்கமைய செயற்படாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

600 கிலோ சாக்லேட்டில் ரஜினியின் கபாலி சிலை!

wpengine

ஏன் இந்த கொள்கலனுக்கு விஷேட அதிரடி படை பாதுகாப்பு பலர் கேள்வி

wpengine

இஸ்லாம் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தருகின்றது – கெரி ஆனந்தசங்கரி

wpengine