பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை

கட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது சம்பந்தமாக பிபிசி வினவிய போது பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அது நடைபெறுவதற்கு ஒரு ஒழுங்கு முறை இருப்பதாகவும், அதன்படி செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

சட்டவிரோமான தேர்தலுக்கே ஐக்கிய தேசிய கட்சி அச்சமடையும் என்றும் சட்டரீதியாக இடம்பெறும் எந்த தேர்தலுக்கும் ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். அமைச்சர் சந்திரசேகர்

Maash

நீரில் மூழ்கி 17 வயது பாடசாலை மாணவன் பலி!

Editor

15 ஆயிரம் உணவுப் பொதிகளை வழங்கிய எஸ்.எம் மரிக்காா்

wpengine