பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து பரிபோனது கல்கிஸ்சை

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய மற்றுமொரு மாநகர சபையின் முதல்வர் பதவியையும் ஐ.தே.க இழந்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்ற தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையின் நகர முதல்வராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் நாவலகே ஸ்டென்லி டயஸ் தெரிவாகியுள்ளார்.குறித்த பதவிக்கான வாக்கெடுப்பு இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரான நாவலகே ஸ்டென்லி டயஸுக்கு ஆதரவாக 23 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, ஐ.தே.கவின் முன்னாள் நகர முதல்வர் சுனேத்ரா ரணசிங்கவிற்கு 21 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2 வாக்குகள் வித்தியாசத்தில் நகர முதல்வர் பதவியை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.

முன்னதாக ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றிருந்த காலி மற்றும் நீர்கொழும்பு நகர சபைகளின் நகர முதல்வர் பதவிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு

wpengine

எந்த காலத்திலும் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட மாட்டாது!- ஜனாதிபதி

wpengine

ஆணைக்குழு அறிக்கை; தப்பியிருக்கலாமென்ற மூளை எது?

wpengine