பிரதான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து மோதல்களை ஏற்படுத்தியது.

மதவாதத்தை அடிப்படையாக கொண்டு அறிக்கை வெளியிடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பதால், அப்படியான அறிக்கைகளை வெளியிடும் நபர்களுக்கு சட்ட அறிஞர்கள் தண்டனை வழங்குவார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கட்டான பிரதேசத்தில் வைத்து அண்மையில் செய்தியாளர்களிடம் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் இருப்பதை தற்காத்து கொள்ள எப்போதும் மதம் மற்றும் இனவாதங்களை ஏற்படுத்தி வந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடந்த போது, அதனை தனக்கு சாதமாக மாற்றி கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து மோதல்களை ஏற்படுத்தியது.

எனினும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்க அந்த கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine

சஜித்,மஹிந்த பகிரங்க விவாதம்

wpengine

மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலையில் நலமாக இருக்கின்றார் – நாமல் ராஜபக்ஷ

Maash