ஐக்கிய தேசியக்கட்சியின் பேரணி இன்று கொழும்பில் இடம்பெற்றது

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு ஹைட் பார்க்கில் இன்று பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

பெற்றுக் கொண்ட வெற்றியை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் பிற்பகல் மூன்று மணியளவில் தாமரைத் தடாகம் அரங்கிற்கு அருகில் பேரணி ஆரம்பமானது.

அதன் பின்னர் பேரணி லிப்டன் சுற்றுவட்டத்தை அடைந்தது. பேரணியின் பின்னர் கொழும்பு ஹய்ட் பார்க்கில் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் பின்னர் கூட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதான மேடைக்கு ஏறாமல் ஆதரவாளர்களுடன் இருந்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares