ஏழை விவசாயிகளுக்கு காணி வழங்கக் கூடாது மன்னார் அரசாங்க அதிபர் தலைமை கூட்டத்தில்

மன்னாரில் ஏழை விவசாயிகளுக்கு சிறுபோக செய்கைக்கான காணி வழங்குவதற்கு வாய்க்கால் மற்றும் விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசாங்க அதிபர் தலைமையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறு போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளுவது தொடர்பான கூட்டம் நேற்று மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.


குறித்த கூட்டத்தில் 10 வாய்க்கால் அமைப்புக்களின் பிரதி தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது மன்னார் மாவட்டதில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளுவதற்கு என சுமார் 1200 ஏழை விவசாயிகளை தெரிவு செய்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை இடம் பெற்று வந்தது.


இந்த நிலையில் குறித்த செயற்பாட்டினால் பெரும் அளவிலான காணிகள் இல்லாத ஏழை விவசாயிகள் தமக்கு தேவையான அரிசியை தாமே உற்பத்தி செய்து பயனடைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.


சிறு போக பயிர்ச் செய்கையை கால காலமாக செய்து ஒட்டு மொத்த இலாபம் பெற்ற வாய்கால் மற்றும் விவசாய அமைப்பு தங்களால் குறித்த நடை முறையை அனுமதிக்க முடியாது எனவும், கால காலமாக தாங்களும் தங்கள் மூதாதையருமே குறித்த சிறு போக செய்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


ஏழை விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எங்களால் அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறு மாவட்ட செயலாளர் அனுமதி வழங்கினால் தாங்கள் ஏழை விவசாயிகளுக்கு காணி வழங்கக் கூடாது எனவும், மீண்டும் வாய்க்கால் மற்றும் விவசாய சம்மேளனங்களுக்கே வழங்க வேண்டும் என கோரி நீதி மன்றம் நாடிச் செல்வேம் என்று கூறி கூட்டத்தில் சத்தமிட்டுக் கொண்டு வெளியேறியுள்ளனர்.


இந்த நிலையில் மீண்டும் அவர்கள் அழைக்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. வருகை தந்திருந்த விவசாயிகளின் வேண்டு கோளுக்கு இனங்கவும் வழமையான நடை முறைகளுக்கு அமைவாகவும் குறிப்பாக கடநத 50 வருடங்களுக்கு மேலாக நடை முறையில் இருந்து வரும் முறையாக நீர் வரத்து அதிக அளவில் இருப்பதனால் கட்டுக்கரை குளத்தின் கீழ் காணி உள்ளவர்களுக்கு ஈவு அடிப்படையில் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்க்கு அமைவாக சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வாய்க்கால் அமைப்புகளுக்கும் வேறு அமைப்புகளுக்கும் விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது இல்லை என்றும் சிறு போக பயிர்ச் செய்கையின் போது நீரின் அளவை அடிப்படையாக கொண்டு கட்டுக்கரை குளத்தின் கீழ் காணி உள்ள விவசாயிகளுக்கு ஈவு முறையில் பகிர்ந்து அழிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares