பிரதான செய்திகள்

ஏறாவூர் பிரதேசத்தில் சட்ட விரோத சாரயம் விற்பனை பெண் கைது.

(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையிலும் “போயா” விடுமுறை தினமான (17.08.2016) இன்று சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை இன்று மாலை 04.00 மணியளவில் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் செங்கலடி எல்லை வீதியில் வசித்து வந்த 41 வயதுடைய பெண் ஒருவர் போயா விடுமுறை தினத்தில் அவரது வீட்டில் வைத்து சட்ட விரோதமான முறையில் சாரயம் விற்பனை செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து குறித்த பெண்னின் வீட்டை பரிசோதனை செய்த பொலிஸார் அவ் வீட்டில் இருந்து 1860 மில்லி லீற்றர் சாராயமும் சந்தேகத்தின் பேரில் 41வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்னையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சாராயத்தினையும் மேலதிக விசாரனைக்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஐ.தே.க எதிராக மைத்திரி கருத்து! இரவு பலரை சந்தித்தார்.

wpengine

பிரபல பத்திரிக்கைக்கு எதிராக ஜே.வி.பி. முறைப்பாட்டு

wpengine

பாகிஸ்தான் தூதர் வெளியேற்றப்படுவாரா? மத்திய அரசு கடும் எச்சரிக்கை

wpengine