பிரதான செய்திகள்

ஏறாவூர் பரகா ஜூம்மா பள்ளிவாசலுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஹிஸ்புல்லாஹ்

(ஆர்.ஹஸன்)
 

ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஒரு மில்லியன் ரூபா நிதி, அதன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏறாவூர் மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் அஸ்பர் ஜே.பி.  மற்றும் முன்னாள் உறுப்பினர் ரவூப் ஏ.மஜீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதியினை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அஸ்வெசும மேன்முறையீடுகளை கணினி கட்டமைப்பிற்குள் உள்ளடக்குவதற்கான கால அவகாசம் நிறைவு!

Editor

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு நியூசிலாந்தில் அமோக வரவேற்பு!

Editor

யூரியா உரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும்

wpengine