பிரதான செய்திகள்

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (27.09.2016) ஏறாவூர் அலிகார் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்சிகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய ஏறாவூர் அலிகார் பாடசாலை மாணவர்கள் மற்றும் அதற்கு உறுதுனையாக அமைந்த ஆசிரியர்களுக்குமான பதக்கங்கள் மற்றும் பரிசில்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கி கௌரவித்தார். unnamed-5

unnamed-7

Related posts

கோட்டாபயவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்கினால், 30 நாட்களில் சகல பிரச்சினைகளும் தீரும் .

Maash

191புள்ளிகளை பெற்று மன்னார் சவேரியார் மாணவன் சாதனை

wpengine

வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி

wpengine