செய்திகள்பிரதான செய்திகள்

ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி.!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார்.

ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி , 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் .

கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ,பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர் , சம்பூருக்கு ஹெலியில் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது கொழும்பு வந்துள்ளது.

முன்னதாக அதானி மின்திட்டம் தொடர்பில் இலங்கையில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் விஜயத்தின்போது அது தொடர்பில் முக்கியமாக ஆராயப்படுமென தெரிகிறது.

Related posts

கொழும்பு அரசியலில் பரபரப்பு அடங்கவில்லை.

wpengine

மஹிந்தவுக்கும் மங்களராமய விஹாதிரபதிக்கும் தொடர்பு

wpengine

கருத்தடை மற்றும் குடும்ப கட்டுபாடு பொருட்கள் விளம்பரத்திற்கு தடை

wpengine