பிரதான செய்திகள்

ஏன் வெள்ள அனர்த்தம் ஞான­சார தேரர் தெரிவிக்கின்றார்.

நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதே கார­ண­மாகும் என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

 

நாட்டில் தற்­போது அதர்ம ஆட்சி நில­வு­கின்­றது அத­னால்தான் இவ்­வா­றான அனர்த்­தங்கள் இடம்­பெ­று­கின்­றன. எனவே போலி தெய்­வங்­க­ளிடம்  குறை­களை கூறாமல் அனர்த்தம் நேரக்­கூ­டாது என உண்மை தெய்­வ­மான புத்த பெரு­மானை பிரார்த்­தனை செய்ய வேண்டும் என்றும் நாட்டு மக்­களை கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

வெள்ள அனர்த்தம் குறித்து  பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் பாரிய வெள்ள அனர்த்த நிலைமை ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. அதனால் 70 க்கும் மேற்­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதனால் வழமை போலவே எமது நாட்டில் ஒரு அனர்த்தம் இடம்­பெற்­ற­வுடன் சக­லரும் ஒன்று திரண்டு செயற்­ப­டு­வது போன்று இப்­போதும் எடுத்­துக்­காட்­டாக நடந்­து­கொள்ள வேண்டும்.

குறிப்­பாக இளை­ஞர்­களே அவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும். இதில், சிங்­க­ளவர் தமிழர் முஸ்­லிம்கள் என்ற பேத­மின்றி மக்கள் என்ற வகையில் சக­லரும் மனி­தா­பி­மா­னத்­துடன் செயற்­பட வேண்­டி­யது அவ­சி்­ய­மாகும். எனது பிரச்­சினை தற்­போதை தரு­ணத்தில் முக்­கி­ய­மில்லை. எனவே எதிர்ப்புச் செயற்­பா­டுளை விடுத்­து­விட்டு தற்­போ­தைய நிலை­மைக்கு உரிய செயற்­பாடு எதுவோ அதனை செய்ய வேண்டும்.

குறிப்­பாக பாதிக்­க­பட்ட மக்கள் புத்த பெரு­மான வேண்­டிக்­கொள்ள வேண்டும். அதனை விடுத்து போலி­யாக சிருஷ்­டிக்­கப்­பட்ட மற்­றைய தெய்­வங்­களை வணங்கி அவர்­க­ளி­டத்தில் குறை­களை கூறு­வதில் அர்த்­த­மில்லை.

அதனால் திருட்டு தெய்­வங்கள் இல்­லாமல் இந்த நாட்டை பாது­காத்த புத்த மதத்தின் தெய்­வங்­க­ளி­டத்தில் விளக்­கேற்றி உங்­களின் கவ­லையை கூறுங்கள். புத்த பூமியை பாது­காத்து தர வேண்­டுங்கள். இயற்கை அனர்த்­தங்­க­ளி­னாலும் வேறு செயற்­பா­டு­க­ளி­னாலும் மாற்றம் பெரு­கின்ற இந்த மூமியின் பூமியை மீட்டுத் தர வேண்டும் என்று வேண்­டுங்கள்.

அதேபோல் புத்­த­பெ­ரு­மானின் போத­னை­களை கேட்­கா­மலும் அவ­ருக்கு மதிப்­ப­ளிக்­கா­மலும் எமது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற  செயற்­பா­டுகள் தான் இவ்­வா­றான இயற்கை அனர்த்­தங்கள் நேர்­வ­தற்கு கார­ண­மாகும்.

அதனால் உண்­மை­யான தெய்­வத்­திடம் பிரார்த்­தனை செய்­யுங்கள். இதற்கு முன்பு இவ்­வா­றான அனர்த்தம் ஏற்­பட்­ட­தில்லை. ததி­டீ­ரென அனர்த்­தங்கள் நேரு­கின்­றன. இது குறி்த்து புத்த பெரு­மானும் போதித்துள்ளார். ஆட்சியாளர்கள் புத்த மதத்தினை பின்பற்றாமல் இருந்தால் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதனால் இன்று நாட்டில் உள்ள அதர்ம ஆட்சியே அனர்த்தத்திற்கு காரணம் என ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது மீராசாஹீப் வாழ்த்து செய்தி

wpengine

விக்னேஸ்வரன் தமிழ் மக்களை தவறான பாதையில் இட்டுசெல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது -சிவமோகன்

wpengine

கூட்டுறவு கூப்பன் முறைமையை மீள அறிமுகம் செய்ய நேரிடும்

wpengine