பிரதான செய்திகள்

எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் இது இன்னும் உரிய முறையில் நடைமுறை ரீதியாக மக்கள் மத்தியில் அமுல்படுத்தப்படவில்லை.

சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகள் ஒருபோதும் எவரும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகியிருக்கும் அனர்த்தங்களின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மத்தியில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக புதிய சர்வதேச ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாரிய சுற்றாடல் அழிவுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமை பற்றி அனைத்து மக்களும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை, மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமையான சுற்றாடலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டங்களுடன் தாமதிக்காது அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வீழ்ச்சியினை நோக்கி கூட்டு எதிர்க்கட்சி பிரசன்ன ரணதுங்க

wpengine

தேசிய ஷூரா சபை அரசியலமைப்பு தொடர்பான தமது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது

wpengine

ஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

wpengine