Breaking
Thu. Sep 12th, 2024
எழுத்தாளனுக்கு விசாலமான பார்வையும் தூர நோக்கும் அவசியமாகும்,எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடியாக செயற்பட வேண்டும். அவர்கள் வாழுகின்ற பிரதேசத்தையும் அங்குள்ள மக்களின் குறைபாடுகளையும் பதிகின்ற,அதற்காக தமது எழுத்தினை பயன்படுத்துகின்ற ஒரு நேர்மையாளனாக இருக்க வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  கூறினார்.

கவிஞர் ஒட்டமாவடி றியாஸின் முகவரி  இழந்த முச்சந்தி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்b71b268a-2ba4-4304-a5e6-bf90a7840aa1எமது பிரதேசத்தில் இருந்து உருவாகி இருக்கும் ஒரு எழுத்தாளனை கெளரவிக்க வேண்டும் என்பதற்காக இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள ஒத்துக்கொண்டேன்,இந்த முகவரி  இழந்த முச்சந்தி எனும் கவிதை தொகுதியின் சொந்தக்காரர் ஒட்டமாவடி றியாஸ் எமது பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எனக்கு பரிச்சியமற்றவர். அதற்கான காரணம் அவர் அதிக காலங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தமையாகும். அவர் சொல்லுகின்ற முகவரி இழந்த முச்சந்தி பற்றி நானும் பேசுவதற்கு ஆர்வமாகவே இருக்கிறேன். ஒரு முச்சந்தியானது ஒருவருக்கு மட்டும் தனியாக உரிமை கொண்டாடும் வகையில் அமையாது மாறாக அது பொதுமக்களின் அல்லது அந்த சந்தியை பாவிப்பவர்களின் சொத்தாகும்.ஒரு பிரதேசத்திலே ஒரு நல்ல விடயம் இருக்குமென்றால் அது ஒரு தனிமனிதன் கொண்டாடும் வகையில் அது இருக்காது மாறாக அந்த நல்ல விடயம் பொதுவானதாக இருக்கும்.eb5a496b-a6ae-4093-a86a-1c4ff2a3d284

நல்லகவிதைகள் எழுத வேண்டும் எழுதுகிறார்கள், வாழ்த்த வேண்டும் வாழ்த்துகிறார்கள் ஆனால் பிழைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டும் தார்மீகப் பொறுப்புமிக்கவர்களாகவும் நாம் இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். எழுத்தாளர்கள்,கவிஞர்கள் நன்மை பயக்கும் மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளும் ஆரோக்கியமான மனநிலை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.அவர்களின் எழுத்துக்களில் நியாயம் இருக்கவேண்டும்.மெய்யுணர்ச்சிக்கு அடிமைப்பட்டு ஒருதலைப்பட்சமாக எழுதாமல் எழுத்தின் தர்மத்தை மனதில் கொண்டு எழுத வேண்டும்.
எங்கள் ஊரிலே கவிஞர் சொல்லுகின்ற முச்சந்தியில் நீண்ட காலமாகவே ஒரு வாகை மரமொன்று இருந்தது,அந்த வாகை மரத்தை காப்பாற்றுவதா அல்லது மக்களின் தேவைக்கேற்ப பாதை விரிவுபடுத்தப்பட்டு,அதற்கு காபட் இட்டு,சுற்றுவட்டம் அமைத்து அந்த பிரதேசத்தை அபிவிருத்தியோடு அழகு படுத்தியது இந்த பிரதேசத்தின் மாற்றம் ஆகும். ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி வந்தால் அந்த பிரதேசம் மாற்றம் அடைந்தே தீரும் என்பது மாறாத விதியாகும். அந்த மரம் வெட்டப்பட்டதில் சகோதரர் ரியாஸ் பாதிப்படைந்துள்ளார் என்பதனை அவரது இந்த கவிதைத்தொகுதியின் பெயர் அத்தோடு அதே தலைப்பிலான கவிதை அடையாளப்படுத்துகிறது. அது அவரது தனிப்பட்ட விடயமாகும். ஆனால் அந்த முச்சந்தி அபிவிருத்தி அடைந்து மாற்றம் பெற்றுள்ளது,முன்னர் நாற்றம் எடுத்தது இப்போது நல்ல சுவாசத்தை பெறமுடிகிறது என்று அந்த முச்சந்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழகியல் மாற்றத்தை அனுபவிக்காமல் இருந்ததற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.
எழுத்தாளனுக்கு விசாலமான பார்வையும் தூர நோக்கும் அவசியமாகும்,அப்போது தான் அவனால் காலத்தால் அழியாத இலக்கிய முதுசங்களை படைக்க முடியும்,அவன் சுயநலமாக சிந்திக்கின்ற போக்கிலிருந்து விடுபட்டு பொதுநலமான சிந்தனையில் பயணிக்க வேண்டும்.
எனவே சகோதரர் ஓட்டமாவடி ரியாஸ் தனது கவலையை விட வேண்டும். அந்த முச்சந்தி முகவரி இழக்கவில்லை மாறாக புதிய முகவரி பெற்றுள்ளது. இந்த உண்மையை அவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கு இருக்கவேண்டும், அந்த முச்சந்தி வாகை மரத்தின் இழப்பு அவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆனால் அந்த முச்சந்தி புதுப்பொழிவுடன் அபிவிருத்தி கண்டிருப்பதை இந்த பிரதேசமே அறியும். எனக்கூறினார்.
இந்த நிகழ்வில் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன்,முன்னாள் தவிசாளர் ஹமீட்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி,ஆசுகவி அன்புடீன்,கவிஞர் பதியத்தலாவ பாரூக்,கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் மற்றும் இந்திய எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *