தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்எமது பிரதேசத்தில் இருந்து உருவாகி இருக்கும் ஒரு எழுத்தாளனை கெளரவிக்க வேண்டும் என்பதற்காக இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள ஒத்துக்கொண்டேன்,இந்த முகவரி இழந்த முச்சந்தி எனும் கவிதை தொகுதியின் சொந்தக்காரர் ஒட்டமாவடி றியாஸ் எமது பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எனக்கு பரிச்சியமற்றவர். அதற்கான காரணம் அவர் அதிக காலங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தமையாகும். அவர் சொல்லுகின்ற முகவரி இழந்த முச்சந்தி பற்றி நானும் பேசுவதற்கு ஆர்வமாகவே இருக்கிறேன். ஒரு முச்சந்தியானது ஒருவருக்கு மட்டும் தனியாக உரிமை கொண்டாடும் வகையில் அமையாது மாறாக அது பொதுமக்களின் அல்லது அந்த சந்தியை பாவிப்பவர்களின் சொத்தாகும்.ஒரு பிரதேசத்திலே ஒரு நல்ல விடயம் இருக்குமென்றால் அது ஒரு தனிமனிதன் கொண்டாடும் வகையில் அது இருக்காது மாறாக அந்த நல்ல விடயம் பொதுவானதாக இருக்கும்.
எனவே சகோதரர் ஓட்டமாவடி ரியாஸ் தனது கவலையை விட வேண்டும். அந்த முச்சந்தி முகவரி இழக்கவில்லை மாறாக புதிய முகவரி பெற்றுள்ளது. இந்த உண்மையை அவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கு இருக்கவேண்டும், அந்த முச்சந்தி வாகை மரத்தின் இழப்பு அவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆனால் அந்த முச்சந்தி புதுப்பொழிவுடன் அபிவிருத்தி கண்டிருப்பதை இந்த பிரதேசமே அறியும். எனக்கூறினார்.