எலும்புத்துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எழுதும் வக்கற்ற எழுத்தாளர் சாய்ந்தமருது இக்பால்.

(மிர்ஹான்)

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வீசும் எலும்புத்துண்டுகளையும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹரீஸ் எறியும் எச்சில் இலைச்சோற்றையும் தின்றுவிட்டு அதன் நன்றிக்கடனாக அவர்களுக்கு தொடர்ந்தும் துதி பாடிக் கொண்டிருக்கின்றார் சாய்ந்தமருது இக்பால்.

இவரின் எழுத்திலே நேர்மையும் இல்லை, சமூகம் மீதான ஆர்வமுமில்லை. ஹக்கீமையும் ஹரீஸையும் திருப்திப் படுத்துவதன் மூலம் ஏதோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கலாமென இவர் கனவு கொண்டிருக்கின்றார். பதினாறு வருடங்களாக முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிவரும் ஹக்கீமும் அவரது சகபாடிகளும் இவரைப் போன்றவர்களை வைத்து தனது காரியங்களை சாதிக்கின்றனர்.

மயில் கட்சித் தலைவரின் அம்பாறை விஜயத்தைப் பற்றி இவர் எழுதியிருந்தார். ரிஷாட்டின் அம்பாறை விஜயம் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு வயிற்றிலே நெருப்பைக் கொட்டியிருக்கின்றது என்பதை சாய்ந்தமருது இக்பாலின் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுகின்றது.

காலத்துக்குக் காலம் தேர்தல் வந்தால் அம்பாறை முஸ்லிம்களிடம் ஆயிரம் விளக்குப் பாடலை போட்டுக் காட்டி வாக்குக் கேட்டு வெற்றி பெறும் ஹக்கீம் சார்ந்த அணியினர் ரிஷாட்டின் எழுச்சியின் மூலம் கதி கலங்கி நிற்கின்றனர்.

ரிஷாட் அம்பாறையில் “சதொச” கிளைகளை திறப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஏ ஆர் மன்சூரின் காலத்திலும் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் ”சதொச” கிளைகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டதாக வெட்கங்கெட்ட எழுத்தை இக்பால் எழுதுகிறார். மன்சூரும் ரிஷாட்டும் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் அந்த மக்களின் நன்மைக்காக சதொச கிளைகளையாவது திறந்துள்ளனர்.

கேவலம், தனது தலைவர் ஹக்கீம் அம்பாறையில் எந்த ஒரு கடையையாவது இந்தப் பதினாறு வருடத்தில் திறந்தாரா? மர்ஹூம் அஷ்ரப்பும் திருமதி பேரியலும் அதாவுல்லாவும் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களுக்கென கொண்டுவந்த எத்தனையோ அலுவலகங்கள் இப்போது முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ஹக்கீம் இருந்த காலங்களில் மூடப்பட்டிருக்கின்றன அல்லது சிங்களப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி இந்த வஞ்சக எழுத்தாளர் சாய்ந்தமருது இக்பால் இதுவரை எதையுமே எழுதவில்லை.

அதே போன்று, தனது சொந்தப் பிரதேசமான சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை பெற்றுத்தருவோம் என ஹக்கீமும் ஹரீஸும் எத்தனை முறை சூளுரைத்தனர்? சந்தாங்கேணி மைதானத்திலும் கண்டிப் பேராளர் மாநாட்டிலும் சாய்ந்தமருது பொதுக்கூட்டத்திலும் பகிரங்கமாக இந்த அறிவிப்பை வெளியிட்ட இவர்கள், சாய்ந்தமருது மரைக்கார் மாரிடம் பள்ளிவாசலில் வைத்து சத்தியம் செய்து கொடுத்தனர்.

பொதுத் தேர்தலில் மயில் கட்சிக்கு சாய்ந்தமருதுவில் இருந்த ஆதரவை முடக்குவதற்காக ஹக்கீமும் ஹரீசும் கொடுத்த பொய்யான வாக்குறுதியே இது. இவர்களால் எந்தக் காலமும் சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச சபையை பெற்றுக் கொடுக்க முடியாதென்பதை எச்சில் சோறுக்கு நாயாய் அலையும் இக்பாலுக்கு ஆணித்தரமாக கூற விரும்புகிறோம்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares