செய்திகள்பிரதான செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல், இலங்கை விநியோகத்தில் இருந்து விலகும் அவுஸ்திரேலிய நிறுவனம்.

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலியாவின் யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கையில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட யுனைட்டெட் பெட்ரோலிய நிறுவனம், சுமார் 27.5 மில்லியன் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்திருந்தது.

அதன் காரணமாக சுமார் ஐநூறு அளவிலான எரிபொருள் விநியோக நிலையங்கள் யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போதைய நிலையில் பெட்ரோலிய விநியோகத்தில் தம்மால் சமாளிக்க முடியாத சிக்கல்கள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனம், அதன் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு அதன் பணியாளர்களின் ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முஸ்லிம் பிரிவின் ஒன்றுகூடல்! மஸ்தான்,ஹிஸ்புல்லாஹ் ,பௌசி

wpengine

வவுனியாவில் வியாபார வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு.

wpengine

நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

wpengine